2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

உணவுகளை கையாளும் நிறுவன ஊழியர்களுக்கு நெருப்புக்காய்ச்சல் தடுப்பூசி

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 20 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.அப்துல் அஸீஸ்)

உணவுப் பொருள்களை கையாளும் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் நெருப்புக்காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

கல்முனை தெற்கு பொது சுகாதார வைத்திய அலுவலக பிரிவுக்குட்பட்ட சகல உணவு வகைகளையும் கையாளும் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் ஊழியர்களுக்குமே இந்த  தடுப்பூசி போடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தொற்றுநோயினால் பாதிக்கப்படும் உணவுப் பொருள்களை கையாளும் நிறுவனங்களின் உரிமையாளர்கள், ஊழியர்கள் ஊடாக  நுகர்வோர்கள் பாதிப்படையாதிருப்பதற்காகவே இந்த ஊசி போடப்படுகிறது.

இந்நிலையில், உணவு வகைகளை கையாளும் நிறுவனங்களின் ஊழியர்கள் எவராயினும் இந்த ஊசி போடாது விட்டால், பொதுச் சுகாதார வைத்திய அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .