Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யூ.எல். மப்றூக்)
ஒலுவில் துறைமுக நிர்மாண நடவடிக்கைகள் காரணமாக, துறைமுகத்தை அண்டிய பகுதிகள் கடுமையான கடலரிப்புக்குள்ளாகி வருகின்றன.
துறைமுக நிர்மாணிப்பின் பொருட்டு கடலின் உட்பகுதிகளில் பாறாங்கற்கள் போடப்பட்டு வருவதாகவும், இதனாலேயே அதனை அண்டிய பகுதிகள் கடலரிப்புக்குள்ளாகி வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இக்கடலரிப்பினால் சுமார் 60 மீற்றர் தூரம் வரையிலான நிலப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடலரிப்புக்குள்ளாகி வரும் நிலப் பகுதியினுள் அமைந்திருந்த தமது வாடிகள் மற்றும் கட்டடங்கள், முற்றாக அழிவடைந்து விட்டதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஒலுவில் பிரதேச அதிகாரிகளுடன் இந்த கடலரிப்பு விடயம் தொடர்பாக தாம் ஏற்கனவே முறையிட்டுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
இதன்போது, விரைவில் இக்கடலரிப்பினைத் தடுக்க உரிய நடவடிக்கையினை எடுப்பதாக அந்த அதிகாரிகள் உறுதி வழங்கியதாகவும் ஆனால் கடலரிப்பினைத் தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் அதிகாரிகள் இதுவரை மேற்கொள்ளவில்லை என்றும் குறித்த மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
2 minute ago
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
20 Nov 2025
20 Nov 2025