2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

அரசுக்கு ஆதரவு வழங்கியது சரியா என்பது உள்ளூராட்சி தேர்தலில் தெரியவரும்: ஹக்கீம்

Super User   / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

                                               (எஸ்.எம்.எம்.ரம்ஸான், எஸ்.ஆர். அஹமட்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியது சரியா பிழையா என்பதை அடுத்த வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலிலேயே தீர்மானிக்க முடியும். அத்தேர்தல் முஸ்லிம் காங்கிரஸுக்கு பரீட்சைக் களமாக இருக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 10வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு எம்.எச்.எம்.அஷ்ரப்  நினைவுப் பேருரை கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் நேற்று நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற மர்ஹூம் இந்நினைவுப் பேருரையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹசன் அலி, பஷீர் சேகுதாவூத், பைசால் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவர் முழக்கம் மஜீத் மற்றும் கட்சிய்ன் அதியுயர் பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்,

18ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்களித்ததன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு நிறைய விடயங்களை சாதிக்க வேண்டியுள்ளதாகவும் இதற்காக வேண்டி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே மூன்றாம் படை ஒன்று உருவாகக் கூடாது

18ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவளிப்பதாக எடுத்துள்ள இந்த முடிவு மறைந்த தலைவர் அஷ்ரப்பின் வழியில்  தான் எடுத்துள்ளோம். தலைவர் அஷ்ரப் அன்று உயர்பீட உறுப்பினர்களிடம் மஷூறா செய்தே தீர்மானம் எடுப்பார். அதுபோல் இன்று நாங்கள் தீர்மானம் எடுத்துள்ளோம். மஷூறா செய்யாமல் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பிழையாகவே சென்றுள்ளன.

அரசாங்கத்திற்கு ஆதரவாக திருத்தச் சட்ட மூலத்திற்கு வாக்களித்ததன் மூலம் ஆளும் கட்சியில் உள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எல்லாவற்றையும் அங்கே கேளுங்கள் என எம்மை நோக்கி விரல் நீட்ட தயாராகவுள்ளானர்.

எங்களை விட்டு பிரிந்தவர்கள் சொல்வது போல் இந்த முஸ்லிம் சமூகத்தை நற்றாற்றில் விடமாட்டோம். உங்களின் விமோசனத்திற்காக மறைந்த தலைவர் ஆரம்பித்த இக்கட்சியின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் உடைத்தெறிய மாட்டோம். அத்துடன், அவர்களைப் போல் இச்சமூகத்தை காட்டிக் கொடுக்கமாட்டோம்.

இக்கட்சி மூலம் தனித்தனி மன்னர்களை உருவாக்கியுள்ளது. அவர்கள் இன்று ஊருக்குள் வேலி போட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிக்கத் திட்டம் போடுகின்றார்கள். அவர்களால் ஒரு போதும் எமது  கட்சியை அழிக்க முடியாது.

கூட்டாக செயற்பட்டால் எதையும் சாதிக்க முடியும். அதனையே இன்று முஸ்லிம் காங்கிரஸ் செய்துள்ளது. இன்று எமது உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்படுகின்றோம். இதில் எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லை எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.(படங்கள்:எஸ்.எம்.எம்.ரம்ஸான்)

alt

alt

alt


  Comments - 0

  • jameel Saturday, 18 September 2010 08:54 PM

    பார்ப்போம் ஹக்கீம் சார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--