S.Renuka / 2026 பெப்ரவரி 01 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகாவுக்கும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவுக்கும் ஐதராபாத்தில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
ஆனால், காதலை போலவே, இருவரும் இந்த விவகாரம் குறித்து வாயைத் திறக்காமல் ரகசியமாகவே வைத்திருந்தனர். ஆனாலும் ராஷ்மிகா விரலில் இருந்த நிச்சயதார்த்த மோதிரம் அதை சொல்லாமல் சொல்லியது.
இதனிடையே, தெலுங்கில் நடிகர் ஜெகபதி பாபு நடத்திய நிகழ்ச்சியில் ராஷ்மிகா கலந்துகொண்டார். அப்போது அவரது விரலில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி பேச்சு எழுந்தது.

இதற்கு ராஷ்மிகா, 'இது என் வாழ்நாளில் முக்கியமான ஒன்று' என்று கண்ணடித்து சிரித்தார்.
இதனை தொடர்ந்து, விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், இந்த தகவல்கள் குறித்து இருதரப்பினரும் பதிலளிக்காமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில், விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி ராஜஸ்தானின் உதய்பூரில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) திருமணம் செய்து கொள்ள வுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் திருமணத்திற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆனால், இதற்கு எப்போதும் போல இருதரப்பினரும் பதிலளிக்காமல் மவுனமாக உள்ளனர்.

1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago