2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

கைவிடப்பட்ட வெடிகுண்டு அகற்றப்படாததால் மக்கள் மீள்குடியேற முடியாமல் தவிப்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 21 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(க.சரவணன்)

பொத்துவில் ஊறணியில் முன்னர் இராணுவ முகாம் இருந்த பகுதியில் கைவிடப்பட்ட குண்டுடொன்று அகற்றப்படாததால் 25 குடும்பங்கள் மீள்குடியேற முடியாமல் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஊறணிப் பிரதேசத்திலிருந்த இந்த இராணுவ முகாமிலிருந்த படையினர் கடந்த மாதம் 30ஆம் திகதி முற்றாக வெளியேறினர். அத்துடன், முகாம் அமைந்திருந்த பகுதியில் 25 குடும்பங்கள் கடந்த 22 வருடங்களின் பின் மீள்குடியேறுவதற்காக சிரமதான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இவ் சிரமதான நடவடிக்கையின்போது கைவிடப்பட்ட நிலையில் குண்டுகள் இருந்தது. இது குறித்து  பொலிஸாருக்கு கடந்த 14ஆம் திகதி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, விசேட அதிரடிப்படையினரால் ஒரு குண்டு மீட்கப்பட்டதுடன், மீட்கமுடியாத நிலையில் மோட்டார்க் குண்டொன்றை சுற்றிப் பாதுகாப்பு வேலி அமைத்து இக் குண்டை இராணுவப் படையினர் மீட்பதாக கூறிச் சென்றனர்.

இக்குண்டு இன்றுவரை மீட்கமுடியாத காரணத்தினால் இப்பகுதி மக்கள் அச்சத்தின் காரணத்தினால் தமது மீள்குடியேற்ற நடவடிக்கையினை மேற்கொள்ள முடியாமலுள்ளது. இதனை சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்தி பொதுமக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--