2026 ஜனவரி 01, வியாழக்கிழமை

2026 பற்றி பாபா வங்காவின் பீதியை கிளப்பும் கணிப்புகள்

Freelancer   / 2026 ஜனவரி 01 , பி.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒட்டுமொத்த உலகத்துக்கே ஜாதகம் எழுதி வைத்து விட்டு சென்ற பாபா வங்கா பற்றி நம்மில் ஏராளமானோருக்கு தெரியும்.

அந்த வகையில், 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகள் உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

இயற்கை பேரழிவுகள், உலகப் போர், செயற்கை நுண்ணறிவு அபாயம், பொருளாதார நெருக்கடி, அந்நிய உயிரினங்களுடன் தொடர்பு போன்றவை அவரது தீர்க்கதரிசனங்களில் இடம்பெற்றுள்ளன.

“பால்கன் நோஸ்ட்ரடாமஸ்” என அழைக்கப்படும் இவர், முன்பு இளவரசி டயானாவின் மரணம், 9/11 தாக்குதல், COVID-19 போன்ற பல நிகழ்வுகளை துல்லியமாக கணித்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

2026-ல் சில சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், கடுமையான காலநிலை மாற்றங்கள் ஏற்படும் என கணித்துள்ளார்.

இந்த ஆண்டில் சர்வதேச அரசியல் பதற்றம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக கூறியுள்ளார்.

மனிதக் கட்டுப்பாட்டை மீறி AI வளர்ச்சி இருக்கும் என கணித்துள்ளார்.

2026-ல் மனிதர்கள் முதன்முறையாக வேற்றுகிரக உயிரினங்களை சந்திக்கலாம் என கணித்துள்ளார்.

உலக சக்தி சமநிலையில் மாற்றம் ஏற்படும் என கூறியுள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X