2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

அக்கரைப்பற்று வீதி விபத்தில் ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(க.சரவணன்)

அக்கரைப்பற்று சாகம வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வீதிவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி விபத்தில் அக்கரைப்பற்று 05ஆம் பிரிவைச் சேர்ந்த சீனிமுஹம்மது ஆதம் லெப்பை (வயது 62) என்பவர் உயிரழந்ததுடன் அவரது மனைவி படுகாயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை அக்கரைப்பற்றிலிருந்து  பொத்துவிலுக்கு சாகம வீதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது வீதியின் குறுக்கே வந்த நாயின் மீது மோதி மேற்படி விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்துக் குறித்தான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--