2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

திருக்கோயில் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுவதற்கென மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருக்கோவில் பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.

கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக தாம் பிறந்த மண்ணை விட்டு அகதிகளாக இடம் பெயர்ந்து கடந்த பல வருடங்களாக அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் வாழ்ந்த திருக்கோவில் பிரதேச மக்கள், தற்போது தமது சொந்த கிராமத்தில் குடியமர்த்தப்பட்டாலும் தொடரும் கஷ்டநிலைகள் விரைவில் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதியமைச்சர் தெரிவித்தார். பிரதியமைச்சருடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் செல்வராஜாவும் வருகை தந்திருந்தார்.

பிரதியமைச்சர் இந்த விஜயத்தின் போது திருக்கோயில் விநாயகர் கோயிலுக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--