2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயம்

Super User   / 2010 செப்டெம்பர் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

                                         (எஸ்.எம்.எம்.ரம்ஸான்)

அட்டாளைச்சேனை பாலமுனை பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதால் அவற்றில் பயணம் செய்த இருவர் பலத்த கயத்துக்குள்ளாகியுள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை மாலை 7.45 மணியளவில் கல்முனை - அக்கரைப்பற்று வீதியில் பாலமுனை பிரதேசத்தில் ஏற்பட்ட இவ்விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பலத்த காயத்திற்குள்ளாகி, பாலமுனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பலாங்கொடையை பிறப்பிடமாகக் கொண்ட 54 வயதான வீரதுங்க முதியான்ஸலாகே குலவங்ச என்பவரது விரல் துண்டாடப்பட்டு கால் எலும்புகள் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

இவர்கள் இருவரும் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.      

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--