Editorial / 2025 டிசெம்பர் 23 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் (தேமுதிக) கட்சியின் பொதுக்கூட்டம் ஜனவரி மாதம் நடைபெற இருக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தின் போது கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேமுதிக அரசியல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது 2026 தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது கரைவேட்டி அணையாத கட்சியின் உறுப்பினர்களுக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ரூபாய் 200 அபராதம் விதித்துள்ளார்.
மேலும் இதனால் ஆலோசனைக் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் மாவட்ட செயலாளர் இந்த பணம் வருகிற பொதுக்குழு கூட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago