Super User / 2010 ஒக்டோபர் 02 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.சகாதேவராஜ, எம்.சி.அன்சார்)
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிறை எப்.எம். மற்றும் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகமும் இணைந்து நடத்திய சர்வதேச சிறுவர் தின பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் சம்மாந்துறை தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.நிசாம், விசேட அதிதிகளாக கிழக்குப் பிராந்திய யுனிசெப் நிறுவனப் பணிப்பாளர் கேப்ரியல் ரோசாரியா, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் எம்.எம்.சறூக், சிறுவர் நன்னடத்தை அதிகாரி ஏ.உதுமாலெவ்வை மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
2000 மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஊர்வலம், சிறுவர் கண்காட்சி, சிறுவர் விநோத விளையாட்டுப் போட்டிகள், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் என்பனவும் இடம்பெற்றன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .