2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

உலக அஞ்சல் தினத்தையொட்டி முத்திரை சேமிக்கும் மாணவர்களுக்கு முத்திரை வழங்கும் வைபவம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( எஸ்.எம்.எம்.றம்ஸான் )

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது தபாலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசத்தில் உள்ள முத்திரை சேமிக்கும் கழகங்கள் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு முத்திரை வழங்கும் வைபவத்தை  தபாலதிபர் ஆ.எம்.நௌஸாத் நடத்தி வைத்தார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது தபாலகத்தின் உதவித் தபாலதிபர் ஏ.ஜமால்தீன் உட்பட எம்.எச்.எம்.றிபான் போன்றோர் கலந்து கொண்டனர்.

வடக்கு, கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முத்திரை சேகரிக்கும் பொழுதுபோக்கை ஊக்குவிக்க அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்புகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட முத்திரைகளையும் முத்திரையுடன் சார்பான பொருட்களையும் கிராமப்புற மக்களிடையேயும் பாடசாலை மாணவர்களிடையேயும் விஸ்தரித்து அவர்களுக்கு இந்த வாய்ப்பினை வழங்குவதே இத் திட்டத்தின் நோக்கமாகும்.

சர்வதேச புகழ்மிக்க பொழுதுபோக்காக பலராலும் கருதப்படும் முத்திரை சேகரிப்பு கலையினை மேலும் விரிவுபடுத்துவதுடன் முத்திரை கழகங்களை அமைத்தல்  முத்திரை சேகரிப்போரை ஊக்குவிப்பதுடன் முத்திரை சேகரிப்போருக்கான விஷேட அடையாள அட்டைகளையும் வழங்க தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சாய்ந்தமருது தபாலகத்துடன் தொடர்புடைய சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் முத்திரை கழகங்களை ஆரம்பித்தல், ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள முத்திரை கழகங்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது தபால் அதிபர் ஆ.எம்.நௌஸாத் காரியப்பர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .