Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 06, சனிக்கிழமை
Kogilavani / 2010 ஒக்டோபர் 12 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
நெல்லின் விலை 1100 ரூபாவிலிருந்து 1700 ரூபா வரை அதிகரித்துள்ளமையால் அம்பாறை மாவட்டத்தில் விவசாயிகள் தற்பொழுது மகாபோக நெற்செய்கையில் ஈடுபடுவதற்கு தயாராகி வருகின்றனர்.
சம்மாந்துறை, கல்முனை, அக்கரைப்பற்று கிழக்கு, அக்கரைப்பற்று மேற்கு, சாய்ந்தமருது, காரைதீவு, பொத்துவில், மத்தியமுகாம், தம்பிலுவில், திருக்கோயில்,அட்டாளைச்சேனை, பாலமுனை, நிந்தவூர், மல்வத்தை, கோமாரி, சடேந்தலாவ, இறக்காமம், சவளக்கடை, உகன, ஹிங்குரான, மகாஓயா, பதியத்தலாவ, லாகுகல, தெஹியத்துக்கண்டிய, பாணம, பன்னல்ஓயா, மாயாதுன்ன மற்றும் நாமல்தலாவ ஆகிய கமநல சேவை மத்திய நிலையங்களுக்கு உட்பட்ட 145000 மேற்பட்ட ஹெக்டயர் நிலங்களில் இம்முறை மகாபோக நெற்செய்கையில் விசாயிகள் ஈடுபடவுள்ளனர்.
இதேநேரம், மகாபோக நெற்செய்கைக்கான முன்னோடிக கூட்டம் அண்மையில் நடைபெற்றபோது இம்மாதம் 15ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை உள்ள காலப் பகுதியில் விவசாயிகள் விதைப்பு வேலைகளை மேற்கொள்ளலாம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
06 Mar 2021
05 Mar 2021