2021 மார்ச் 04, வியாழக்கிழமை

அழைப்புக் கடிதம் தாமதமானதால் உரிய தினத்தில் கணித்தல் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 12 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(க.சரவணன்)

கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் தரம் 4,5ஆம் தர மாணவர்களுக்கு 100 கணித்தல் செயற்பாட்டு மாவட்ட மட்ட போட்டியில் சம்மாந்துறை கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு அழைப்பு கிடைக்காததால் அப் போட்டியில் மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனதுடன் இதற்குத் தீர்வாக மறுநாள் அவர்களுக்கு பரீட்சை நடத்தப்பட்டது என பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மாகாண கல்வித் திணைக்களம் தரம் 4,5ஆம் தர மாணவர்களுக்கு வலயக் கல்வி ரீதியாக 30 மாணவர்கள் பங்கு கொள்ளும் கணித்தல் செயற்பாட்டு போட்டி சாய்ந்த மருது அல்- கமரூன் வித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கல்முனை, திருக்கோவில், அக்கரைப்பற்று மாணவர்கள் பங்குபற்றியபோதும் சம்மாந்துறை வலயக் கல்வி பாடசாலை மாணவர்களுக்கான சுட்டென் மற்றும் அழைப்புக்கள் கிடைக்கவில்லை. இதனால் இப்போட்டியில் மாணவர்கள் பங்கேற்க முடியமால் போயுள்ளது.

இப்போட்டிக்கான அழைப்பிதழ்கள் கடந்த 06ஆம் திகதி சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்திற்கு தொலைநகல் மூலம் அனுப்பி வைத்துள்ளதாக மாகாணக் கல்வி இணைப்பாளர் பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இப்போட்டியில் சம்மாந்துறை வலயக் கல்வி மாணவர்களுக்கு அழைப்பிதழ் கிடைக்கவில்லை என பெற்றோர், இப்போட்டியில் கடமையாற்றிக் கொண்டிருந்த சம்மாந்துறை ஆரம்ப கல்வி உதவி கல்விப் பணிப்பாளர் ஊடாக கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளளனர். இதனையடுத்து இம்மாணவர்களுக்கு 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அல்-கமரூன் வித்தியாலயத்தில் மீண்டும் நடத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .