2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

ஆங்கில ஆசிரியர்களுக்கு செயலமர்வு

Super User   / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

மஹிந்த சிந்தனையின் கீழ் ஆங்கில ஆசிரியர்களுகக்கான 10 நாள் செயலமர்வு கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில் அமைந்துள்ள ஆசிரியர் மத்திய வள நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் வாழ்க்கைத்திறன் ஒன்றாக ஆங்கிலம் மொழி என்ற திட்டத்தை ஜனாதிபதி செயல் முனைப்பு தேசிய மட்ட ஆசிரியர் பயிற்சித் திட்டத்தின் ஏற்பாட்டிலேயே இச்செயலமர்வு நடைபெறுகின்றது.

ஆசிரியர் மத்திய வள நிலையத்தின் பொறுப்பாளர் ஐ.எல்.நூறுல் அமீன் தலைமையில் நடைபெற்று வரும் இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய பாடசாலைகளைச் சேர்ந்த 40 ஆங்கில ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்டமாக நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தின் முதலாம் கட்ட செயலமர்வு ஏற்கனவே நிந்தவுர் அல்-மஸ்கர் பெண்கள் பாடசாலையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .