2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

வாசிப்பின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் ஊர்வலம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

வாசிப்பு மாதத்தினையொட்டி வாசிப்பின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் வகையில் பெரியநீலாவணை புலவர்மணி வித்தியாலய மாணவர்கள் இன்று காலை ஊர்வலமொன்றினை நடத்தினர். இந்த ஊர்வலத்தின் போது, மாணவர்கள் பதாதைகளை ஏந்தி, வாசிப்பின் சிறப்பைக் கூறும் சுலோகங்களை உச்சரித்தவாறு சென்றார்கள்.
 
இதேவேளை, வாசிப்பு மாதத்தினையொட்டி மருதமுனை பொது நூலகத்திலும் வாசிப்பின் சிறப்பை உணர்த்தும் வகையிலான நிகழ்வொன்று இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டதோடு, நூலகத்திலுள்ள புத்தகங்கள் மற்றும் இணையத்தளப் பயன்பாடு போன்றவைகளையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--