2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

தலையில் பலகை விழுந்து சிறுவன் ஸ்தலத்திலேயே மரணம்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

பொத்துவில் மாவட்ட வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வீட்டொன்றில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது கழிவுப்பலகை விழுந்ததில் ஸ்தலத்திலேயே அச்சிறுவன் மரணமாகிய சம்பமொன்று இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் முன்பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயதுடைய முஹமட் ரபிக் இயாஸ் அஹஸின் என்னும் சிறுவன் மீதே, தாவாரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த கழிவுப் பலகை விழுந்ததில் அச்சிறுவன் நசுங்கி ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளான்.

பொத்துவில் நீதிமன்ற நீதவான் கருணாகரன் ஸ்தலத்திற்கு விரைந்து, சடலத்தை பார்வையிட்டு மரண விசாரணை நடத்தியதுடன் சடலத்தை உறவினரிடம் கையளிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--