Janu / 2026 மார்ச் 16 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை கையளிப்பதற்காகவே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவல இந்த அழைப்பாணையை விடுத்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் கொள்வனவு முகாமையாளராகப் பணியாற்றிய காலத்தில், அதன் களஞ்சியசாலையில் காபட் இடும் ஒப்பந்தத்தை ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சாதகமான முறையில் வழங்கியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசாங்கத்திற்கு 8,859,708/- (88 இலட்சத்து 59 ஆயிரத்து 708) ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் 70ஆவது பிரிவின் கீழ் 'ஊழல்' எனும் குற்றத்தைச் செய்துள்ளதாக இவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் மேலதிக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 23ஆம் திகதி அமைச்சரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago