2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

கனவுகள் கலைக்கப்பட்ட அஷ்ரப் எனும் 'அடையாளம்'

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(எம்.சி.அன்சார்)

தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் 62ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு தேசிய ரீதியிலான கவிதைப்போட்டி ஒன்றினை நடத்தியது.

அதில் தெரிவுசெய்யப்பட்ட கவிதைகளைத் தொகுத்து, கனவுகள் கலைக்கப்பட்ட அஷ்ரப் எனும் 'அடையாளம்' கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபவத்தில் கவிஞர் எம்.எஸ்.எம்.அஸாருதீன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், விசேட அதிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம்.நௌசாத், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், அரசியல் பிரமுகர்கள், அஷ்ரபின் அபிமானிகள், புத்திஜீவிகள் மற்றும் போட்டியில் பங்குபற்றிய கவிஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன்,  பிரதான உரையை போராசியர் எம்.எல்.ஏ.காதர் நிகழ்த்தினார்.

இதன் முதற்பிரதியை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் பெற்றுக்கொண்டதுடன் போட்டியில் பங்குபற்றிய கவிஞர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .