2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு பஸ் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)  

இலங்கை - இந்திய நட்புறவு செயல்திட்டத்தின் கீழ் இந்திய உயர்ஸ்தானிகர் தூதுவராலயம் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான பஸ் ஒன்றினை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு அன்பளிப்பு செய்துள்ளது.


கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸாக் மேற்கொண்ட பெரு முயற்சியினால் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி பொதுச்செயலாளர் நிஸாம் காரியப்பரின் சிபார்சின் பேரில் இப்பேரூந்து இக்கல்லூரிக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.


இப்பேரூந்தினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் வைபவம் கல்லூரியின் புதிய அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் நேற்று கல்லூரியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி பொது செயலாளர் நாயகம்  நிஸாம் காரியப்பரும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸாக்கும் விசேட அதிதிகளாக கல்முனை வலய கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக், ஸ்தாபக அதிபர் எம்.ஸீ.ஏ.ஹமீட், முன்னாள் அதிபர் ஏ.எச்.ஏ.பஸீர், கல்முனை வலய பிரதி கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எம்.ஜலீல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--