2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

கல்முனை பொதுச்சந்தையின் வீதி வியாபாரிகளை அகற்றும்படி உத்தரவு

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் கல்முனை மாநகர பொதுச்சந்தையின் வீதி வியாபாரிகளை அகற்றும்படி கல்முனை மாநகரசபை உத்தரவிட்டுள்ளது.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை மாநகர பொதுச்சந்தையின் தெற்கு வீதியின் இருபக்கமும் வியாபாரத்தில் ஈடுபடும் 69 வியாபாரிகளையும் எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் கடைகளை அகற்றும்படி கல்முனை மாநகர சபை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கல்முனை மாநகரசபையின் பிரதிமேயர் ஏ.ஏ.பஷீரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது... 'இவ்வீதியில் இரண்டு பாடசாலைகள், விகாரை, மயானம் போன்றவை அமைந்திருப்பதுடன் இஸ்லாமாபாத் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியும் இதுவாகும். இவ் வீதியில் வியாபாரத்தில் ஈடுபடுவது மக்களுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனாலேயே இவ்வாறான கட்டளையை பிறப்பித்தோம்' என்றார்.

இதேவேளையில் வியாபாரிகள் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸை சந்தித்து இதுதொடர்பாக முறையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .