S.Renuka / 2026 மார்ச் 15 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
காதலியைச் சந்திக்கச் சென்ற இளைஞர் ஒருவர், பாலியல் ஆற்றலை மேம்படுத்த அதிக அளவிலான மாத்திரைகளை உட்கொண்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இளைஞரின் உடலை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு அவரது காதலி தப்பியோடிய நிலையில், இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷர் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதாவது அங்கு காதலியை ரகசியமாகப் பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்து கிடந்தார்.
பாக்பத் என்ற பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞர் தனது காதலியைப் பார்க்க புலந்த்ஷர் ஊருக்கு வந்துள்ளார்.
அப்போது அவர் பாலியல் செயல்பாடுகளை அதிகரிக்க மாத்திரைகளைச் சாப்பிட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், எந்தவொரு மருத்துவர் பரிந்துரையும் இல்லாமல் அளவுக்கு மீறிச் சாப்பிட்டுள்ளார். இதனால் அவரது உடலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். அவரது காதலி என சந்தேகிக்கப்படும் பெண், சடலத்தை மாவட்ட மருத்துவமனையில் விட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து கோட்வாலி நகர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாயமான அந்த பெண்ணைத் தீவிரமாகத் தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த ஃபதேபூர் புத்தி கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான வினோத் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பஞ்சாபில் பணிபுரிந்து வந்த வினோத், அண்மையில்தான் தனது சொந்த கிராமத்திற்குத் திரும்பியிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை, தனது முதலாளிக்கு விபத்து ஏற்பட்டதாகவும், அங்குச் செல்ல வேண்டும் என்றும் தனது குடும்பத்தினரிடம் கூறிவிட்டு வினோத் கிராமத்தில் இருந்து கிளம்பியுள்ளார்.
ஆனால், மதிய நேரத்தில் வினோத்தின் செல்போனிலிருந்து அவரது சகோதரர் பிரதீப்பிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. வினோத்திற்கு விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக புலந்த்ஷருக்கு வருமாறும் அந்த பெண் சொல்லியுள்ளார்.
வினோத்தை மருத்துவமனைக்கு அழைத்து வந்த அந்த பெண், முதலில் அவர் தனது கணவர் என்றே சொல்லியுள்ளார். இருப்பினும், வினோத் உயிரிழந்துவிட்டதால் அப்பெண் பதறிப் போனார்.
மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், காவலர்கள் அங்குச் செல்வதற்குள் அப்பெண் அங்கிருந்து மாயமாகிவிட்டார். இப்போது அந்த பெண்ணை தேடும் பணிகள் தான் தீவிரமாக நடந்து வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் வினோத்தும் அந்தப் பெண்ணும் முதலில் ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளனர்.
அங்கு அந்த மாத்திரைகளை வினோத் அளவுக்கு அதிகமாக உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், இருவரும் மால்கா பூங்காவுக்குச் சென்றபோது, வினோத்தின் உடல்நிலை திடீரென மோசமடைந்துள்ளது.
நடந்த விஷயங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது வினோத் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் கருதுகின்றன.
மருத்துவமனையில் உடலை விட்டுவிட்டு அந்த பெண் தப்பி ஓடியது, இந்த வழக்கின் மீதான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. பொலிஸார் தற்போது அந்த பெண்ணை அடையாளம் கண்டு, அவர் இருக்கும் இடத்தைக் கண்டறியும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வினோத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வினோத் குமாரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நகரக் பொலிஸ் ஆய்வாளர் பிரகர் பாண்டே கூறுகையில், "உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இப்போது அந்த பெண்ணை கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளோம். சீக்கிரமே எல்லா உண்மைகளும் தெரிய வரும்" என்றார்.
7 minute ago
10 minute ago
16 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
16 minute ago
27 minute ago