2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

அம்பாறை மாவட்டத்தின் சிறந்த உப அஞ்சலதிபராக எம்.எம்.ஏ முபாறக் தெரிவு

Kogilavani   / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை மாவட்டத்தின் சிறந்த உப அஞ்சலதிபராக சாய்ந்தமருது ஆஸ்பத்திரி வீதி உப அஞ்சலதிபர் எம்.எம்.ஏ. முபாறக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண அஞ்சல் தின நிகழ்வு அண்மையில் அம்பாறையில் நடைபெற்றபோது இவருக்கான விருது அஞ்சல் மா அதிபர் எம்.கே.பி. திசாநாயக்கவினால் வழங்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தின் சிறந்த உப அஞ்சல் அதிபரான இவர் கிழக்கு மாகாணத்தின் உப அஞ்சல் அதிபர்களில் மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

கடந்த வருடம் அகில இலங்கை ரீதியில் சிறப்பு விருது, அஞ்சல் திணைக்களத்தினால் இவருக்கு வழங்கப்பட்டது.

சுனாமியால் முற்றாக பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது ஆஸ்பத்திரி வீதி உப அஞ்சல் அலுவலகம் இவரது முயற்சியினால் சொந்த கட்டிடமொன்றில் இயங்கிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0

  • SITHEEK Sunday, 31 October 2010 02:25 PM

    இது தான் இளையவனின் முதிர்ச்சி , ஒரு நாடு முன்னேரவேண்டுமேன்றல் இளம் இரத்தங்களை அரச இயந்திரத்தில் ஏற்றவும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .