Super User / 2010 ஒக்டோபர் 30 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சி.அன்சார்)
அக்கரைப்பற்று தொழிநுட்பக் கல்லூரியில் பல்வேறு கற்கை நெறிகளில் கல்வி கற்று இறுதிப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபமும், வரம் சஞ்சிகை வெளியீட்டு விழாவும் இன்று காலை தொழிநுட்பக் கல்லூரி அதிபர் ஏ.ஜீ.எம்.கபூர் தமைமையில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
பிரதம அதிதியாக இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும, கௌரவ அதிதியாக உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா,விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண அமைச்சர்களான ரி. நவரெட்னராஜா, விமலவீர திசாநாயக்க, மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ. அமீர், தேவப்பெரும, அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.தவம், தொழில்நுட்ப மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சித்ரல் அம்பேவத்த உடபட கல்விமான்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் அதாவுல்லா ஆகியோரால் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியதுடன், இத்தொழிநுட்பக் கல்லூரி தொடர்பான வரம் எனும் சஞ்சிகையினை அமைச்சர் டலஸ் அழகப்பெருமிற்கு வழங்கி வைக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
4 minute ago
54 minute ago
2 hours ago
29 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
54 minute ago
2 hours ago
29 Oct 2025