2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கல்முனையில் திண்மக்கழிவு அகற்றல் வேலைத்திட்ட விழிப்பூடல் நிகழ்வு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.ஏ.அஸீஸ்)

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரேதேசங்களில்  மேற்கொள்ளப்படும் முறையான திண்மக்கழிவு அகற்றல் வேலைத்திட்டம் தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டும் நடவடிக்கை கல்முனை சுற்றாடல் மற்றும் பசுமை பாதுகாப்பு அமைப்பின் தொண்டர்களின் உதவியுடன் நேற்று நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித்திட்ட சேவைக்கான அலுவலகத்தின் வளங்கள் அபிவிருத்தி ஆலோசனை நிறுவனத்தின் வழிகாட்டலில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை மாநகர பிரதேசத்தின் வீதி வீதியாக மேற்கொள்ளப்பட்ட இந்த விழிப்பூட்டல் நிகழ்வின் போது முறையாக திண்மக் கழிவகற்றும், திண்மக்கழிவு முகாமைத்துவ சுற்றாடல் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் வழிகாட்டல் அட்டைகளும் தொண்டர்களினால் வீடு வீடாக விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .