2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் அத்தியட்சகர் எச்.எல். ஜமால்தீன் ஞாபகார்த்த கவிதைப் போட்டி

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 31 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

மறைந்த பொலிஸ் அத்தியட்சகர் எச்.எல். ஜமால்தீனின் ஓராண்டு நினைவினையொட்டி மருதமுனைப் பிரதேச பாடசாலைகளிடையே நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் மருதமுனை ஐந்தாம் பிரிவு கிராம அபிவிருத்தி சங்க பல்தேவைக் கட்டிடத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

மர்ஹும் டொக்டர் எச்.எல். ஜமால்தீன் எஸ்.பி. பௌண்டேசன் தலைவர் எச்.எல். நஜிமுத்தீன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல். துல்கர் நஹீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக, பதில் நீதிபதியும் சட்டத்தரணியுமான ஏ.எம். பதுறுத்தீன், கல்முனை பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

மேற்படி கவிதைப் போட்டியில், முதலிடத்தினைப் பெற்றுக்கொண்ட அல் ஹம்றா வித்தியாலய மாணவி கே.ஆர். றிஸ்லா, இரண்டாமிடத்தினைப் பெற்றுக்கொண்ட அல் ஹம்றா வித்தியாலய மாணவி என்.எப். அஸ்மா, மூன்றாமிடத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட சம்ஸ் மத்திய கல்லூரி மாணவர் எச்.எம்.எம். யசார் ஆகியோருக்கு பரிசில் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அதேவேளை, போட்டியில் கலந்துகொண்ட 08 மாணவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துர்கர் நஹீம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

மேற்படி கவிதைப் போட்டி மற்றும் பரிசளிப்பு வைபவத்தினை மர்ஹும் டொக்டர் எச்.எல். ஜமால்தீன் எஸ்.பி. பௌண்டேசன் ஒழுங்கு செய்து நடத்தியிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .