2020 நவம்பர் 25, புதன்கிழமை

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதால் நால்வர் படுகாயம்

Kogilavani   / 2010 நவம்பர் 03 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்ஃஐ.எம்.அஸ்ஹர்)                                            

சாய்ந்தமருது பிரதான வீதியில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இன்று காலை 7.30 மணியளவில் கல்முனையில் இருந்து காரைதீவு நோக்கிச் சென்று கொண்டிருந்த விசேட அதிரடிப்படையினரின் கவசவாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட அதே திசையில் வந்த மோட்டார் சைக்கிள் கல்முனை நோக்கி வந்த மூன்று மோட்டார் சைக்கிள்களுடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில்  மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த பெண் ஒருவர் உட்பட அனைவரும் வீதி ஓரங்களிலும் நடு வீதியிலும் தூக்கி வீசப்பட்டனர்.

மோட்டார் வாகனத்தில் பயணம் செய்த ஒருவர் தூக்கி வீசப்பட்டபோது பின்னால் வந்த வாகனமொன்று திடீரென நிறுத்தியதால் அவர் மயிரிழையில் உயிர்தப்பியதோடு ஏனைய நான்குபேரும் பலத்த காயங்களுக்குள்ளானார்கள்.

உடனடியாக விசேட அதிரடிப்படை வீரர்களும் பொதுமக்களும் இணைந்து காயப்பட்டவர்களை சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்குயில்அனுப்பியதுடன்  வீதியில் ஒன்றன்மேல் ஒன்றாக குவிந்து கிடந்த மோட்டார் சைக்கிள்களையும் அப்புறப்படுத்தினார்கள்.

மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--