2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

இறக்காமத்தில் மேட்டுநில பயிர்ச்செய்கையில் வெற்றி

Menaka Mookandi   / 2010 நவம்பர் 07 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட குடுவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மேட்டுநில பயிர்ச் செய்கை வெற்றியளித்துள்ளது.

 

கடந்த பலவருடங்களாக பயிர் செய்யப்படாமல் இருந்த பெரும்பாலான விவசாய நிலங்களில் விவசாயிகள் நெற்பயிர்ச் செய்கையிலும் ஏனைய உணவுப் பயிர்ச் செய்கையிலும் இம்முறை பெரும் போகத்தின் போது பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கத்தரி ,மிளகாய் ,வெண்டி மற்றும் கீரை போன்ற பயிர்கள் சிறந்த விளைச்சலை தந்துள்ளளதாகவும் இதற்காக சேதனப்பசளைகளை தான் பயன்படுத்தி வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--