Kogilavani / 2010 நவம்பர் 13 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர் )
மாளிகைக்காடு பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகளின் ஆங்கில அறிவை மேம்படுத்தும் நோக்கில் விசேட ஆங்கில வகுப்புகளை நடத்த மாளிகைக்காடு மனிதாபிமானமுள்ள சமுக சேவை ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மாணவர்கள் க.பொ.த.சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய பின்னர் ஆங்கில அறிவு இன்மை காரணமாக தமது உயர்கல்வியினை தொடர்வதில் பலவிதமான சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வாறான நிலைமையிலிருந்து மாணவர்களை மீட்டு சிறந்த ஆங்கில அறிவுள்ளவர்களாக மாற்றி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கும் உயர்கல்வியினை தொடர்வதற்கும் இது பெரும் வாய்ப்பாக அமையுமென ஒன்றியத்தின் தலைவர் எம்.எச்.எம். தாரிக் தமிழ் மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025