2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

உங்கள் பெயரை நிலவுக்கு அனுப்பவும்

Editorial   / 2026 ஜனவரி 19 , பி.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் திட்டத்தை நாசாவின் மார்ஷல் விண்வெளி ஆய்வு மையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி விண்ணப்பிக்கப்படும் பெயர்கள் அனைத்தும் ஒரு சிறப்பு SD கார்டில் (SD Card) சேமிக்கப்பட்டு குறித்த காட்டை நிலவை நோக்கிய வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை மேற்கொள்ளவுள்ள ஓரியன் (Orion) விண்கலத்தில் வைக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாசா வெளியிட்டுள்ள X பதிவில், ஆர்வமுள்ளவர்கள் இதில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள், அன்புக்குரியவர்கள் மற்றும் செல்லப் பிராணிகள் (Pets) ஆகியோருக்காக பிரத்தியேக "போர்டிங் பாஸ்களை" (Boarding Passes) பெற்றுக்கொள்ளும் வசதியையும் நாசா வழங்கியுள்ளது. நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப விரும்புவோர் நாசாவின் உத்தியோகபூர்வ இணையதள முகவரியான https://go.nasa.gov/49NQ4mf ஊடாக உங்கள் பெயர்களைப் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X