2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

களுவாஞ்சிக்குடி பிரதேச புதிய சுகாதார வைத்திய அதிகாரி நியமனம்

Kogilavani   / 2010 நவம்பர் 13 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சர் வைத்தியர்.சாமித்தம்பி ராஜேந்திரன் களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக சுகாதார அமைச்சின் செயலாளர் ரவீந்திர றூபேவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

ரஷ்யாவில் மருத்துவப்பீட (எம்.டி) பெற்ற அவர் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் இரண்டரை வருடங்கள்  வைத்திய அத்தியட்சகராகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும்இ கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையிலும் தலா இரண்டு வருடங்கள் வைத்திய அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

காரைதீவைப் பிறப்பிடமாக கொண்ட இவர்,  காரைதீவு மத்திய மகாவித்தியாலயம், கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்றவராவார்.

களூஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி  பணிமனையின்கீழ் கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு, ஓந்தாச்சிமடம், மகிழூர், மகிழூர்முனை,   குருமண்வெளி, எருவில், பட்டிருப்பு, மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய சுகாதார சிகிச்சை நிலையங்கள் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .