2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

தாண்டியடி கிராம சேவகருக்கு முதலிடம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 14 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள  கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கிடையில் நடத்தப்பட்ட அலுவலக முகாமைத்துவப் போட்டியில் தாண்டியடி பிரதேச  கிராம சேவகர் சு.பாக்த்தீபன் 170 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தை பெற்றுள்ளதாக பிரதேச செயலாளர் எஸ்.அழகரெத்தினம் தெரிவித்தார்.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள்  அமைச்சினால்  நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டு வரும் இம்முகாமைத்துவப் போட்டியின் போது கிராம உத்தியோகத்தர்களின் வினைத்திறன்  சுற்றுப்புரச்சூழல் அலுவலகம் மற்றும் மக்களுடனான தொடர்பாடல்கள் திருப்திகரமான சேவை வழங்குதல் என்பவற்றின் அடிப்படையில் வைத்து பரிசீலனை நடத்தப்பட்டுள்ளது.

இப்போட்டியில் 2ஆம் இடத்தை தப்பட்டை பிரதேச கிராம சேவகர் வீ.செல்லத்துரை 156 புள்ளிகளையும் 3ஆம் இடத்தை  காஞ்சிரங்குடா பவிரதேச  கிராம உத்தியோகத்தர் அ.மனோகரன் 147  புள்ளிகளைப் பெற்றுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--