2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

நாவிதன்வெளி தமிழ் கிராமங்களுக்கு பொன் செல்வராசா எம்.பி. விஜயம்

Kogilavani   / 2010 நவம்பர் 18 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள தமிழ் கிராமங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா நேற்று விஜயமொன்றை மேற்கொண்டார்.

இவ் விஜயததின் போது அவருடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரமுகர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோரும் சென்றிருந்தனர்.

நாவிதன்வெளிப் பிரதேச சபைக்கு விஜயம் செய்த இக் குழுவினரை சபைத் தலைவர் த.கலையரசன் மற்றும் உப தலைவர் எஸ்.குணரட்ணம் உட்பட உறுப்பினர்கள் வரவேற்று பிரதேசத்தில் இதுவரை மீள்குடியேற்றம் இடம்பெறாத பகுதிகள் மற்றும் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

இக் குழுவினர் பொதுமக்களுடனான சந்திப்புக்களிலும் கலந்துகொண்டு பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்தனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--