Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 06 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
சர்வதேச விசேட தேவைக்குரியவர் வாரத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட தேவைக்குரியவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் திறன் வெளிக்காட்டும் நிகழ்வும் இன்று திங்கட்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எம்.பி. சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் அதிதியாக பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் கலந்துகொண்டதுடன், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் என்.ஜீ.அப்துல் கமால், 'கியுமன் லிங்' அமைப்பின் பொது முகாமையாளர் ஏ.எல். கமர்டீன் உட்பட பிரதே சசெயலக உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் விசேட தேவைக்குரிய மாணவர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் விசேட தேவைக்குரியோர்களுக்கான மூன்று சக்கரவண்டிகளும் காது கேட்கும் கருவிகளும் வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .