2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

மீன் தொட்டியில் வளர்க்கப்படும் 'வெள்ளை பாம்பு'

Super User   / 2010 டிசெம்பர் 08 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

கல்லடிப் பாலத்தின் கீழ் காணப்படும் வெள்ளை நிறப் பாம்பு என்று கூறப்படுகின்றவைகளில் ஒன்றை மருதமுனை 3 ஆம் பிரிவைச் சேர்ந்த நபரொருவர் அங்கிருந்து பிடித்து வந்து தனது வீட்டிலுள்ள மீன் தொட்டியில் வளர்த்து வருகின்றார்.

இந்த மீன் தொட்டியினுள் அந்தப் 'பாம்பு'க்கு இரையாக குறித்த நபர் சிறிய மீன்களை விட்டுள்ளபோதும், அந்த மீன்களை பாம்பு உண்ணவில்லை என்று குறித்த நபர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, பாம்பு என்று கூறப்படும் இந்த உயிரினத்தின் முள்ளந் தண்டு மேற்பகுதி மற்றும் அடிப்பகுதிகளில் செதில்கள் காணப்படுகின்றன.

மேற்படி உயிரினம் 'நீல்' எனப்படும் ஒரு வகை மீன் எனக் கூறப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--