S.Renuka / 2026 ஏப்ரல் 07 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்றில் புகழ் பெற்ற தீர்க்கதரிசிகள் என்று வரும்போது, அதில் முதலிடத்தில் இருப்பது பாபா வாங்காதான்.
20-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பல்கேரியக் கண் தெரியாத தீர்க்கதரிசியான பாபா வங்கா, கடந்த சில தசாப்தங்களாக நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரங்கள் மீதான செப்டம்பர் 11இல் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் உட்பட உலக வரலாற்றை மாற்றிய பல முக்கிய நிகழ்வுகளைத் துல்லியமாக கணித்ததன் மூலம் உலகப்புகழ் பெற்றார்.
ஒக்டோபர் 3, 1911 அன்று, அந்த காலகட்டத்தில் ஒட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த சலோனிகா விலாயத்தின் ஸ்ட்ரூமிக்கா நகரில் பிறந்தவர் வங்கேலியா பாண்டேவா குஷ்டெரோவா, அவரது எதிர்காலத்தை கணிக்கும் திறனால் பிற்காலத்தில் 'பாபா வங்கா' என்று அழைக்கப்பட்டார்.
தனது 12ஆவது வயதில் கண்பார்வையை இழந்த இவர், அதன் விளைவாகவே எதிர்கால நிகழ்வுகளைக் காணும் ஆற்றலைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
தனது வாழ்நாளின் பெரும்பகுதியை பல்கேரியாவில் உள்ள பெலாசிகா மலைத்தொடரின் ரூபிட் பகுதியில் வாழ்ந்த பாபா வங்கா, 1970-களின் பிற்பகுதியிலும் 1980-களிலும் அவரது கணிப்புகள் பலித்ததன் மூலம் பெரும் புகழை அடைந்தார்.
அந்த காலகட்டத்தில் அமானுஷ்ய ஆற்றல்கள் என்று அழைக்கப்பட்ட அவரது தனித்திறன் மூலம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பிரபலமானவராக மாறினார். பெரும்பாலும் 'பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்' என்று அழைக்கப்படும், பாபா வங்கா, 1996-ஆம் ஆண்டு காலமானார்.
இருப்பினும், எதிர்காலம் குறித்த இவர் விட்டுச் சென்ற ஏராளமான தீர்க்கதரிசனங்கள், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் இன்றும் நம்பப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் போதும் அனைவரின் கவனமும் பாபா வாங்காவின் கணிப்புகளை நோக்கியேத் திரும்பும்.
பாபா வாங்காவின் கணிப்புகளின் படி, முஸ்லிம்கள் ஐரோப்பா முழுவதையும் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றும், 2043-ஆம் ஆண்டிற்குள் ஐரோப்பிய நாடுகளான 44 நாடுகளும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வரும் என்றும் கணித்துள்ளார்.
பாபா வாங்காவின் இந்த அதிர்ச்சியளிக்கும் கணிப்பு பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஐரோப்பா முழுவதும் முஸ்லிம்களின் ஆட்சி எதிர்காலம் குறித்த தனது அதிர்ச்சியளிக்கும் கணிப்புகளில் ஒன்றாக, 2026-ஆம் ஆண்டிற்குள் ஒட்டுமொத்த ஐரோப்பியக் கண்டத்தின் மக்கள் தொகையும் சுற்றுச்சூழல் மற்றும் புவிசார் அரசியல் காரணங்களால் கணிசமான அளவில் குறையும் என்று பாபா வாங்கா தனது தீர்க்கதரிசனத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாம் ஏற்கெனவே 2026-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்ட சூழலில், ஐரோப்பாவில் மக்கள் தொகை குறைப்பு ஏற்படுவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. இருப்பினும், கொரோனா போன்ற அசாதாரண சூழல் எந்த நிலையிலும் ஏற்படக்கூடும் என்பதால் எதையும் நம்மால் உறுதியாக கூற முடியாது.
மேலும் பாபா வாங்கா மற்றொரு தீர்க்கதரிசனத்தை வெளியிட்டுள்ளார், அது விரைவில் ஐரோப்பாவின் அடையாளத்தையும், வரலாற்றையும் மாற்றியமைக்கக்கூடும்.
அதன்படி, கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் நிறைந்த ஐரோப்பா கண்டமானது 2043-ஆம் ஆண்டிற்குள் முஸ்லிம்களால் ஆளப்படும் என்றும், இப்பிராந்தியத்தில் கிறிஸ்தவத்திற்குப் பதிலாக இஸ்லாம் முதன்மையான மதமாக உருவெடுக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.
இந்த மிகப்பெரிய மக்கள் தொகை மாற்றத்தின் காரணமாக, இவ்விரு சமூகங்களுக்கும் இடையே ஒரு கலாச்சாரப் போர் வெடிக்கக்கூடும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார்.
அடுத்த 35 ஆண்டுகளில் முஸ்லிம் மக்கள் தொகை 70 சதவீதம் வரை உயர்ந்து, 3 பில்லியன் என்ற எல்லையைத் தாண்டும் என்றும் இதன் மூலம், 2060-ஆம் ஆண்டிற்குள் கிறிஸ்தவ மதத்தை மிஞ்சி, இஸ்லாம் உலகின் மிகப்பெரிய மதமாகத் திகழும் என்று சில ஆய்வுகள் கூறுகிறது. இந்தியாவும், நேபாளமும் முஸ்லிம் ஆட்சியின் கீழ் வருமா? இந்தியா மற்றும் நேபாளம் ஆகியவை இந்து மக்கள் அதிகளவில் வாழும் உலகின் மிகப்பெரிய நாடுகளாகும். ஐரோப்பாவை இஸ்லாம் கைப்பற்றும் என்று பாபா வங்கா கணித்திருந்தாலும், நேபாளம் மற்றும் இந்தியா உட்பட எந்தவொரு ஆசிய நாட்டிற்கும் அத்தகைய கணிப்பை பாபா வாங்கா வெளியிடவில்லை.
12 minute ago
19 minute ago
20 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
20 minute ago
36 minute ago