2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

வீதியோர மின் கம்பங்களின் கீழ் மரங்கள் நடப்பட்டுள்ளதால் ஆபத்து

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 09 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பினை முன்னிட்டு அண்மையில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நடப்பட்ட கணிசமான அளவு மரங்கள் வீதியோர மின் கம்பங்களின் கீழ் நடப்பட்டுள்ளதாகவும், இம்மரங்கள் வளரும் போது ஆபத்துக்கள் ஏற்படும் நிலை உருவாகும் எனவும் அப்பிரதேச மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

நிழல் தரும் நோக்கில் நடப்பட்டுள்ள மேற்படி மரங்கள் ஓங்கி உயர்ந்து வளரும் போது, மின் கம்பிகளைத் தொடும் நிலை ஏற்படும் என்றும், அதன் போது ஏற்படும் ஆபத்தினைத் தவிர்க்கும் வகையில் குறித்த மரங்களைப் பிடுங்கி – வேறு இடங்களில் நடுமாறும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பினை முன்னிட்டு நாடு முழுவதிலும் 11 இலட்சம் மரங்கள் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--