2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

தீ மூட்டிக்கொண்ட நபர் உயிரிழந்தார்

Super User   / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன், எம்.சி.அன்சார், எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

கல்முனை கடற்கரை வீதி,  ஐஸ் தொழிற்சாலைக்கு அருகாமையில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர்  தனக்குத் தானே  தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற  இச்சம்பவத்தில்  வளத்தாப்பிட்டியைப் சேர்ந்த  ஒரு பிள்ளையின் தந்தையான சந்திரகுமார் வயது 29 எனும் நபரே  உயிரழந்துள்ளார்.

 மேற்படி நபர் ஆபத்தான நிலையில்  கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும்  சிகிச்சை பயனின்றி உயிரழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களுக்குள் கல்முனை பொலிஸ் பிரிவில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--