2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

கல்முனை மாநகர சபை உறுப்பினர் பிணையில் விடுதலை

Super User   / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கல்முனை பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் உட்பட நால்வர் இன்று புதன்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.றிஸ்வி முன்னிலையில் இவர்கள் ஐந்து பேரையும் இன்று புதன்கிழமை ஆஜர்படுத்தியபோது 2000 ரூபா காசு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

கல்முனை தனியார் பஸ் நிலைய வளாகத்திற்குள் சட்டவிரேதமாக கடைகள் அமைத்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலே இவர்கள் கல்முனை பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--