2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

அட்டாளைச்சேனையில் வடிகான்களை விரைவாக அமைக்குமாறு கோரிக்கை

Super User   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனைப் பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் வடிகான்கள் அமைப்பதில் இழுபறி நிலை காணப்பட்டு வருவதால் மழை காலங்களில் அப்பிரதேசம் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றார்கள்.

அட்டாளைச்சேனையின் பிரதான வீதியோரத்தில் வடிகான்களை அமைப்பதற்குத் தடையாக அப்பகுதியிலுள்ள சிலர் தமது கட்டிடங்களை இன்னும் அகற்றிக் கொடுக்காமலுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் குற்றம் கூறுகின்றனர்.

இதேவேளை, தமது கட்டிடங்களை அகற்றிக் கொடுத்து பல மாதங்கள் ஆகியுள்ள நிலையிலும், இன்னும் அங்கு வடிகான்கள் அமைக்கப்படவில்லை என பொதுமக்கள் கூறுகின்றார்கள்.

இந்தக் குற்றச் சாட்டுகளுக்கிடையில், மழை காலங்களில் இப்பகுதியில் வெள்ளம் வழிந்தோட முடியாததொரு நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அங்குமிங்கும் பகுதி பகுதியாக அமைக்கப்பட்டுள்ள வடிகான்களில் நீர் தேங்கியுள்ளதாகவும், இதனால் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

எனவே, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் வடிகான்களை உரிய முறையில் விரைவாக அமைக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .