Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
சட்டவிரோத ஆயுதமொன்றைத் தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சந்தேக நபருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், அவரைக் குற்றவாளியெனக் கண்ட மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விசுவலிங்கம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, மேல் நீதிமன்ற நீதிபதி இவ்வாறு தீர்ப்பளித்தார்.
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த யூசுப் றியாஸ் என்பவருக்கே மேற்படி ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை கோணாவத்தை பகுதியில் கடந்த 2007ஆம் ஆண்டு ரி - 56ரக துப்பாக்கியொன்றுடன் மேற்படி நபர் அக்கரைப்பற்று குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
குறித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அவருக்கு தீர்ப்பளிக்கப்பட்டது.
2 hours ago
8 hours ago
01 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
01 Jan 2026