Freelancer / 2026 ஜனவரி 02 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை இலக்கு வைத்து, உக்ரைன் நேற்று ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என ரஷ்யா கூறுகிறது.
ரஷ்யாவின் கெர்சான் பிராந்தியத்தில் உள்ள விடுதியொன்றில் நேற்று புத்தாண்டை முன்னிட்டு பெருமளவிலான மக்கள் கூடியிருந்தனர்.
இந்த நிலையில், அவர்களை இலக்கு வைத்து உக்ரைன் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன என ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது.
அத்துடன் இந்த தாக்குதலின் போது ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் தமது அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே உக்ரைன் அனுப்பிய 168 ஆளில்லா விமானங்களை, தாம் தாக்கி அழித்ததாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது. (a)
43 minute ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
7 hours ago
9 hours ago