2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

சம்மாந்துறை பௌஸி மாவத்தை வீதியை புனரமைக்க கோரிக்கை

Super User   / 2010 டிசெம்பர் 21 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவிலுள்ள ஆதி கிராமமான சென்நெல் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியான பௌஸி மாவத்தை வீதி மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருப்பதனால் குண்டும் குழியுமாக காணப்படுகின்றது.

இதனால் போக்குவரத்துச் செய்யமுடியாத நிலையில் இருப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
சம்மாந்துறை நகரிலிருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இக்கிராமத்தில் 1500ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது வசித்து வருகின்றன.

இக்கிராம மக்களின் அவசரத் தேவைக்காக பிரயாணம் செய்ய முடியாத நிலையும், பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், அரச அதிகாரிகள், முதியோர்கள், கற்பினித்தாய்மார்கள், நோயாளிகள், மற்றும் வாகனங்கள் என்பன இவ்வீதியினூடாக பிரயாணம்  செய்வதில் தினமும் பல்வேறு அசௌரிகங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

இவ்வீதியின் புனரமைப்புச் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கவனத்திற்குச் கொண்டுவந்தும் இதுவரை எந்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையென இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இவ்வீதியினை புனரமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .