2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் பார்வை

Super User   / 2011 ஜனவரி 09 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை, சாய்ந்தமருது மற்றும் காரைதீவு ஆகிய பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்;ட மக்களுக்கான உதவி நடவடிக்கைகளை திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் நேரில் பார்வையிட்டார்.

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களின் பாதிக்கப்பட்ட மக்களினை நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டதுடன் பிரதேச செயலகங்களிலும் மதஸ்தாபனம்களிலும் அரசாங்க உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து நலனுதவி வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் பற்றி கலந்துரையாடினார்.

இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ஜவாத், பிரதேச யெலாளர் எம்.எம். நௌபல், மாநகர சபை பதில் ஆணையாளர் எம். இர்சாத் உட்பட மதஸ்தாபனங்களின் தலைவர்கள், கிராம உத்தியோகஸ்தர்கள்,சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--