2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

வெள்ளத்தில் சிக்கியோரை காப்பாற்ற சென்றவர் தோணி கவிழ்ந்ததில் பலி

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 10 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனைப் பகுதியில் வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள மக்களை காப்பற்றும் முகமாக,  மக்களை தோணியில் ஏற்றிக்கொண்டு திரும்பிவரும்போது தோணி கவிழ்ந்ததினால் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.  


மேற்படி நபர் வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவியளிப்பதற்காக  சென்றபோது தோணி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தார்.  இரு பிள்ளைகளின் தந்தையான கல்முனை மணற்சேனையை சேர்ந்த சிந்தாத்துரை கனகசுந்தரம் (52 வயது)  என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்தவராவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X