2026 மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை

இன்று முதல் கியூ.ஆர். முறையில் எரிபொருள் விநியோகம்

Freelancer   / 2026 மார்ச் 15 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கியூ.ஆர்.குறியீட்டு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை இன்று (15) முதல் அமுலுக்கு வரும் என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகத்தை சீரமைத்து, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த கியூ.ஆர். முறைமை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதோடு, முறைகேடுகள் மற்றும் அத்துமீறிய கையிருப்புகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை பதிவு செய்து பெற்ற கியூ.ஆர். குறியீட்டை பயன்படுத்தி மட்டுமே எரிபொருளை பெற முடியும். அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் இந்த முறைமையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X