2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறையில் களைகட்டத் தொடங்கிய பொங்கல் கொள்வனவு

Menaka Mookandi   / 2011 ஜனவரி 14 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையினாலும் வெள்ளத்தினாலும் வீதிகளில் இறங்க முடியாமல் தவித்த கரையோரப் பிரதேச தமிழ் மக்கள் மழை ஓய்ந்து வான் வெளுத்ததனை தொடர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாக உழவர் திருநாளாம் தைப்பொங்கலுக்கான ஆடைகளை கொள்வனவு செய்வதற்காகவும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவும்  கடைகளில் நிறைந்து காணப்படுகின்றனர்.

வெள்ள நிலமை காரணமாக மிக நீண்ட நாட்களின் பின்னர் வெளி மாவட்டங்களில் இருந்து கல்முனை பிரதேசத்திற்கு மரக்கறிகள் இன்று வந்திருந்த போதிலும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவது மிகவும் கவலையளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--