2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அம்பாறையில் வெள்ள பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு நிவாரணம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 16 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அக்கரைப்பற்று கோளாவில் விநாயகர் வித்தியாலயத்தில்  தங்கியுள்ள   மக்களை பார்வையிட்ட கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளபதி  மேஜர் ஜெனரல் பொனிடாஸ் பெரேரா அங்குள்ள மக்களுக்கு உலர் உணவுப் பொருள்களை வழங்கி வைத்தார்.

தலா 2050 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொருள்கள் 150 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கோளாவில் விநாயகர்  வித்தியாலயத்தில்  தங்கியுள்ள மக்களுக்கான உலர் உணவுப் பொருள்கள் வழங்கும் நடவடிக்கை    பொத்துவில், அக்கரைப்பற்று இராணுவ லெப்டினன் கேணல் கீர்த்தி குணசோம தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X