Super User / 2011 ஜனவரி 16 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சி.அன்சார்)
அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள நலன்புரி முகாம்களில் தொற்று நோய் பரவுவதைத் தடுப்பதற்காக இலவச சிகிச்கை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியலயத்திற்குட்பட்ட 13 சுகாதார வைத்திய அலுவலகங்கள் உள்ள பிரதேசங்களில் சிகிச்கை முகாம இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
இதன் பிரதான வைபவம் சம்மாந்துறை மஜீட்புரம் வித்தியாலயத்தில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.இஸ்;ஸதீன் தலைமையில் நடைபெற்றது.
புpரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ்.இப்றாலெவ்வை கலந்து கொண்டார்.
இம்முகாமில் விசேட வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தாதியர்கள் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்கின்றனர்.
.jpg)
1 hours ago
8 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
02 Nov 2025
02 Nov 2025