2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

அம்பாறையில் கிராமம் தோறும் தகவல் தொழில்நுட்ப நிலையங்கள்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 20 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கிராமம் தோறும் 15 தகவல் தொழில்நுட்ப நிலையங்களை நிறுவுவதற்கான  திட்டத்தை சமாதான கற்கைநெறிகளுக்கான அமைப்பு நேற்று புதன்கிழமை ஆரம்பித்து வைத்துள்ளது.


அம்பாறையில் பின்தங்கிய கிராமங்களிலுள்ள இளைஞர், யுவதிகளின் கணினிக் கல்வி அறிவை விருத்தி செய்யும் நோக்குடன் கிராமிய தகவல் தொழில்நுட்ப நிலையங்களை மேற்படி நிறுவனம் நிறுவி வருகிறது. 2012ஆம் ஆண்டுக்கிடையில் அம்பாறையில் 15 நிலையங்களை நிறுவி அதன் மூலம்; 500 இளைஞர், யுவதிகளுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதுடன்,  அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களும் வழங்க ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளன.

சம்மாந்துறையில் முதலாவது தகவல் தொழில்நுட்ப நிலையம்  அமைப்பின் பிரதம பணிப்பாளர் எஸ்.எல்.றியாஸ் தலைமையில் திறந்து வைக்கப்பட்டதுடன், கற்கைநெறிகளும் ஆரம்பிக்கப்பட்டன.

இரண்டாவது தகவல் தொழில்நுட்ப நிலையம்  பாலமுனை உதுமார்புரத்தில் திறக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .